வட இந்தியாவில் தர்மம் எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் தொடர்பில் ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்திருக்கிறது.
வாரணாசியின் சாலை பகுதியில் இளம்பெண்ணான சுவாதி, தர்மம் எடுத்துக்கொண்டிருந்துள்ளார். ஆனால் அவர் அழகாக ஆங்கிலம் பேசியது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சுவாதி தெரிவித்துள்ளதாவது, அனைவரையும் போன்று, எனக்கும் அழகான குடும்பம் இருந்தது.
ஆனால், நான் முதல் குழந்தையை பெற்ற போது, என் உடலின் வலப்பக்கம் செயலிழந்து போனது. அது தான், என் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். எனவே வாரணாசிக்கு வந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அவரது உடைகளைப் பார்த்து, மனநலம் சரியில்லாதவர் என்று நினைத்து பலரும், தர்மம் போட்டு செல்கிறார்கள். ஆனால், பிஎஸ்சி பட்டதாரியான சுவாதி, அருமையாக ஆங்கிலம் பேசுகிறார். நல்ல மனநிலையில் இருக்கும் அவர், தன் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தனக்கு ஏற்ற வேலை கிடைத்தால் போதும் என்று கூறுகிறார்.