Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்போனில் ரொம்ப நேரம் பேசாத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை தொழிலாளி ஆவார். இவரது கணவர் சிவா உடல் நலக்குறைவால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மகள் பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் அம்பிகா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக வீட்டில் மாணவி பாக்கியலட்சுமி மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அம்பிகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அம்பிகா கதவை தட்டியபோது எந்தவித பதிலும் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடைத்து உள்ளே சென்றார். அப்போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அம்பிகா அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மாணவியை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவி பாக்கியலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பாக்கியலட்சுமி செல்போனில் பேசியதை அவரது பெற்றோர் அம்பிகா கண்டித்ததால் அவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா..? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |