Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பிரபல கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி….!!

இலங்கை – வெட்ஸ் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சின் 24-வது ஓவரில் கருணாரத்னே பந்தை லெக் திசை நோக்கி வேகமாக அடித்தார். அந்த பந்து பேட்டருக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அறிமுக வீரர் ஜெர்மி சோலோசனோ ஹெல்மெட் மீது வேகமாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து போன அவர், அப்படியே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அதன்பின் சக வீரர்கள் அனைவரும் திரண்டனர்.. இதையடுத்து அவர் ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவர் குணமடைய வேண்டும் என்று அணி வீரர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. அறிமுக போட்டியிலேயே இப்படி நடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

 

 

Categories

Tech |