Categories
தேசிய செய்திகள்

BREAKING:  காற்று மாசு… டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுபாட்டை தடுக்க முழு ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டும்,  அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்த தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மட்டுமே டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள காற்று மாசுபாடு குறையும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |