கனடாவிற்குள் 56 துப்பாக்கிகளுடன் வாகனத்தில் நுழைய முயன்ற புளோரிடாவைச் சேர்ந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கனடாவின் எல்லை சேவைகள் நிறுவனமானது இதுகுறித்து கூறுகையில், ப்ளோரிடாவை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணிடம், சோதனை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண் வந்த வாகனத்தின் பின்புறத்தில், இருந்த தடைசெய்யப்பட்ட 56 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் மற்றும் 43 pistol magazines பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அபாயகரமான குற்றங்களை தடுக்கவும், கனடா மக்களை பாதுகாப்பதற்கும், எங்களது உறுதியான அற்பணிப்பிற்கு இதுதான் சான்று என்று தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் வரும் 24 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.