லண்டனில் பேருந்தில் பயணித்த கருப்பினத்தை சேர்ந்த பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லண்டன் நகரில் இரவு 9:20 மணிக்கு பேருந்தில் பயணித்த ஒரு நபர் சிகரெட் பிடித்திருக்கிறார். எனவே, அவரின் அருகில் இருந்த பெண், பேருந்தில் எதற்காக சிகரெட் பிடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், “உனக்கு பிடிக்கவில்லை எனில், உன் நாட்டிற்கு செல்” என்று கூறியதோடு, அந்த பெண்ணை இன ரீதியாக தாக்கி பேசியிருக்கிறார்.
எனவே, அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிடெக்டிவ் கான்ஸ்டெபிளான ஆடம் ஜாக்சன் என்பவர், கருப்பின பெண்ணை, அந்த நபர் அவதூறாக பேசியது அதிர்ச்சியளிக்கிறது. அவர் பேசிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.