கனடாவில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நபர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவுப் பொருட்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஒரு மாதத்திற்கு பெய்யக்கூடிய மழை இரண்டு நாட்களில் பெய்தது. இதனால், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதில், மாட்டி பலியான மூவரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டிருக்கிறது. பலத்த மழை பெய்ததால், அதிகமான சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் போக்குவரத்து தடை செய்யபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எனவே, உணவு பொட்டலங்களை, கொண்டு சென்ற ஹெலிகாப்டர்களை, ராணுவ வீரர்கள் மிகப்பெரிய விமானங்களில், ஏற்றி, வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.