கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரால் பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .அந்த சம்பவம் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வருவதற்குள், கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
இதனால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் உதவிகளுக்கு என்ற ‘89033 31098’ என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.