விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடைசி விவசாயி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த அசத்தலான டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.