Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மிதக்கும் நகரம்…. பொதுமக்கள் அவதி….!!

தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரமே வெள்ளத்தில் மிதந்ததில் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 15 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி பகுதியில் தொடர் கனமழையால் பல ஏரிகள் நிரம்பி வழிகின்றது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வாணியம்பாடி தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் நகரம் முழுவதும் வெள்ள நீரில் மிதக்கிறது. இதனால் நகரில் இருக்கும் ஆத்துமேடு பாலம் உள்பட 5 பாலங்களிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றில் தற்போது ஜின்னா மேம்பாலம் மட்டுமே இருப்பதால் அனைத்து வாகனங்களும் அந்தப் பாலத்தில் செல்வதையோட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வாணியம்பாடி நகரின் மேட்டுப்பாளையம் பகுதியை இணைக்கும் பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டதை அதிகமான பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். இதில் வெள்ளம் காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நகர்ப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இங்கு 300-க்கும் அதிகமான வீடுகள் தண்ணீரில் மிதப்பதினால் அங்கே இருந்தவர்களை பாதுகாப்பாக பள்ளிகளில் தங்க வைத்துள்ளனர்.

பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் அரசியல் கட்சிகள் சார்பாக வழங்கி வருகின்றனர். பின் கிராமப்புறங்களிலும் இதே நிலை நீடித்துக் கொண்டிருப்பதினால் பள்ளிகளில் மக்களை தங்க வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கோ. செந்தில்குமார் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் சதாசிவம் உள்பட பலர் பார்வையிட்டு அங்கு இருப்பவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்துள்ளனர். இதைப்போல் பலர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் நகர்ப்பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |