Categories
உலக செய்திகள்

“லண்டனில் சமூக ஆர்வலர்கள் முற்றுகை!”.. உடல்நலமற்ற குழந்தையை காணச்செல்ல கெஞ்சிய தந்தை.. பரிதாப வீடியோ..!!

லண்டனில் பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் ஆர்வலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ஒரு NHS உடல் நலமில்லாத தன் குழந்தையை காண செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கெஞ்சிய வீடியோ வெளியாகியுள்ளது.

லண்டனில் கடந்த மாதம் 8-ஆம் தேதியில், M25-ன் சந்திப்பு-25ல் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்பின்பு, ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வோக்ஸ்ஹால் பாலம் மற்றும் லம்பேத் பாலத்தில், சமூக ஆர்வலர்கள் மீண்டும் முற்றுகையிட்டார்கள். அப்போது, ஐந்து மணி நேரங்கள் தாண்டியும் சாலை மறியலை அவர்கள் கைவிடாததால், ஒரு NHS ஊழியர், “நீங்கள் செய்வது சரியல்ல, என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், உடனே நான் வீட்டிற்கு போக வேண்டும்.

நீங்கள் பிற மக்களை பற்றியும் நினைக்க வேண்டும். எனக்கும் உடல் நலம் சரியில்லை. நான் எவ்வாறு வீட்டிற்கு செல்வது”, என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் ஆர்வலர் ஒருவரிடம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதன்பின்பு காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 நபர்களை கைது செய்தனர்.

Categories

Tech |