Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியப்பனின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |