Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (25.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் சீராக இருக்காது. அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாகவும்  இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இன்று தடைபட்ட காரியங்கள் ஓரளவு தடை நீங்கிச் செல்லும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் காலதாமதமாகத்தான் வந்து சேரும். ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

இன்று தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் தொழில் வியாபாரம் இழுபறியான சூழ்நிலையில் இருக்கும். உங்களுடைய வாக்கு வாதத்தை மட்டும் கட்டுப்படுத்தி விடுங்கள் அது போதும். புதியதாக ஏதும் முயற்சிகள் இன்று எடுக்க வேண்டாம். கூடுமான வரை பொறுமையாக இருங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தொழிலில் அறிமுகமாவார்கள். கூடுமானவரை அவரிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று அரசாங்க ரீதியில் இருந்து வந்த சிக்கல்கள் ஓரளவு சரியாகும்.

தடைபட்ட ஆர்டர்கள் கையில் வந்து சேரும். ஆனால் தன வரவுக்கு மட்டும் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதை கருத்தில் கொண்டு இன்றைய நாளை அதற்கு ஏற்றார்போல் செயல்படுத்துங்கள். இன்று உங்களுக்கு சிவப்பு நிறம் அதிர்ஷ்ட நிறமாக  உள்ளது. சிவப்பு நிறத்தை  பயன்படுத்தி இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தன லாபம் பெருகி மன மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி  உற்சாகம் பிறக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு மரியாதை கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள்.

பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இன்றையநாள் ஓரளவு அதிர்ஷ்டகரமான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்துமே சிறப்பை ஏற்படுத்தும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். சக மாணவர்களிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பணவரவு, வாக்கு மேன்மை, குடும்பத்தில் சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்து ராஜயோகத்தையும் இன்று பெறுவீர்கள். வாகனம் மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மை கொடுக்கும்.

மூத்த சகோதரர் உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து கொள்வார்கள். சக மாணவரின் ஒத்துழைப்பும் இன்று கிடைக்கும். இன்று உங்களுக்கு நீல நிறம் சிறப்பு நிறமாக இருக்கும். இந்த நிறத்தை பயன்படுத்தி முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்பு விலகிச்செல்லும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மன குழப்பம் விலகி தெளிவாக சூழ்நிலை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு இன்று கூடுதலாக பொறுப்புக்கள் சேரும்.

கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் கவனமாக படியுங்கள் அது போதும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரிய கொண்டாட்டங்கள் இருக்கு.ம் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். பணவரவு தாராளமாகவே இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் மிக நேர்த்தியாக இருக்கும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படகூடும்.

இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு நீல நிறம் சிறப்பு வாய்ந்த நிறமாக உள்ளது. நீல நிறத்தை பயன்படுத்தி இன்று முக்கியமான காரியத்தை  மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவிகள் புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று எதிர்பார்த்த தனவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் எச்சரிக்கை இருக்கட்டும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் சாதகமான பலன் இன்று கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கனிவாகப் பழகுங்கள்.

பணவரவு தாராளமாகவே இருக்கும், அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். அதில் கவனம் இருக்கட்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப்படுவீர்கள். பெரியவர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர்களிடம் கவனமாக பேசுங்கள் அதுபோதும். உறவினர்களின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும்.

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தை பயன்படுத்தி முக்கியமான காரியத்தில் ஈடுபடுங்கள். அந்த காரியம்  வெற்றியை கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று செய்யக் கூடிய காரியங்களை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் ஏற்படும். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். இடைவிடாத பணி காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கிடைக்க கூடும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். வருமானம் நல்லபடியாகவே இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு உற்சாகமான நாளாக இன்று இருக்கும். அவர்கள் செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடனுக்குடன் அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். சாதகமாக பயன்படுத்தி எந்த ஒரு விஷயத்தையும் முன்னேற்றகரமாக எடுத்துச் செல்வீர்கள்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தனவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது. கூடுமானவரை இன்று நாவடக்கம் என்பது ரொம்ப முக்கியம். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாகவே இருக்கும். அதுபோலவே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து காரியத்தையும் மேற்கொள்ளுங்கள்.  காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக கிடைக்கும். அனைத்து பாக்கியங்களும் இன்று உங்களுக்கு கிடைக்கும். தெய்வீக நம்பிக்கையால் வாழ்வில் சில திருப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். இன்று காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். பொருளாதார சிக்கல்களும் தீரும். அது மட்டுமில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தெளிவான சிந்தனை இருக்கும்.

எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து இன்று செய்யக் கூடிய சூழல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை பற்றிய செய்திகள் வந்து சேரும். அது மட்டுமில்லாமல் புதிய பொறுப்புகளும் வந்து சேரும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். முக்கிய பணியை இன்று சிரமமில்லாமல் நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும்.

சகமாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆசியர்களின் பாராட்டுக்களுக்கும் இன்று உட்படுவீர்கள். இன்றைய நாள் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் நாளாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. ஆரஞ்சு நிறத்தில் முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு வழியில் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு கிடைப்பதன்மூலமாக அந்தஸ்து உயரும். மாணவக் கண்மணிகள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களையும் தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை அதிகமாகவே இருக்கும். இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றகரமாகவே இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். திருமண யோகங்களும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

பணத்தை மட்டும் மற்றவர் பார்வையில் படும்படி எண்ண வேண்டாம். இதை மட்டும் நீங்கள் கவனமாக செய்யுங்கள். இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாடு உங்களுக்கு சிறப்பு வாய்ந்த வழிபாடாக அமையும். இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில்  நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! பிள்ளைகள் மேல் பாசம் இன்று அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. மனைவி மூலம் உங்களுக்கு தனலாபம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். மனம் உற்சாகமாக காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி படிப்பது அவசியம். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும்.

வீண் அலைச்சல் மட்டும் கொஞ்சம் இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரிடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.

இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்ட மிக்க நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மகரம் ராசி நண்பர்களே..!! இன்று நுட்பமான வேலையை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. கூடுமானவரை பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பயணத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆன்மீக செலவுகள் அதிகமாகும். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். ஆனாலும் எந்த காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.

அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அது மட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கலகலப்புக்கு எந்த குறையும் இருக்காது.

கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக இன்று மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமாக உழைப்பீர்கள். இன்று மாணவர்கள் படிப்பில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று வசிக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

தேவையான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதியுதவி கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். அந்த பயணம் அலைச்சலை கொடுப்பதாகத் தான் இருக்கும். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சாதுரியம் மூலம் காரிய வெற்றி ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் நல்ல மதிப்பு கூடும்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவை வந்து தட்டும். புகழ் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். மனம் ஆனால் சோர்வாக இருக்கும். கூடுமானவரை நீங்கள் இன்று சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசியல் துறையினர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மன கவலை இன்று ஏற்படும்.

உடல் சோர்வு இன்று அதிகமாக இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆன்மிகத்தில் நாட்டமும் மன தைரியமும் உங்களுக்கு இன்று ஓரளவு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது மிகவும் நல்லது. எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்கள் மீது கோபப்படாமல் பேசுங்கள். கூடுமானவரை அக்கம் பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். சில முக்கியமான பணியாக இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொள்ளாதீர்கள். இன்று இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் இருக்கும்.

கூடுமானவரை ஆசிரியர்கள் சொல்வதை கவனமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று சக மாணவருடன் எந்தவித சண்டை சச்சரவுகள் வேண்டாம். பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டநிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தை அணிந்துகொண்டு முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாடு உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாக அமையும். அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். உங்களுடைய காரிய வெற்றியை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |