சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று விநாயகமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கனமழையின் காரணத்தினால் இருசக்கர வாகனம் சாலையோரம் சறுக்கி விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விநாயகமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்எ.