இருசக்கர வாகனம் மீது கார் மோதி தொழிலாளி உயிரிழந்த நிலையில், வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள அம்மன்கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அம்மன்கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் ராஜா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைதொடர்ந்து படுகாயமடைந்த வேல்முருகனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.