செல்போன் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் திடீரென விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரௌண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வேல்முருகன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.