மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பணவரவு, வாக்கு மேன்மை, குடும்பத்தில் சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்து ராஜயோகத்தையும் இன்று பெறுவீர்கள். வாகனம் மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மை கொடுக்கும்.
மூத்த சகோதரர் உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்றைய நாள் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து கொள்வார்கள். சக மாணவரின் ஒத்துழைப்பும் இன்று கிடைக்கும். இன்று உங்களுக்கு நீல நிறம் சிறப்பு நிறமாக இருக்கும். இந்த நிறத்தை பயன்படுத்தி முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்