மா.கா.பா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி தொகுப்பாளர் ஆனார். இதனையடுத்து, இவர் mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.