சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வட மதுரையிலுள்ள தனியார் பஞ்சு மில்லில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி வீட்டிற்கு வந்த சிறுமி மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசித்து வரும் வடிவேலுடன் சிறுமி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை வைத்து காவல்துறையினர் திருத்துறை பூண்டிக்கு சென்று வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமிக்கும் வடிவேலுக்கும் கைபேசியில் ஏற்பட்ட தொடர்பால் கடத்தி கட்டாய திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.