மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரவி குடும்பத்தை பிரிந்து திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி குடிபோதையில் இருந்த ரவி அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரவியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.