Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “பெண்களால் பணவிரயம் ஏற்படும்”.. சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் ஏற்படும். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். இடைவிடாத பணி காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கிடைக்க கூடும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். வருமானம் நல்லபடியாகவே இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு உற்சாகமான நாளாக இன்று இருக்கும். அவர்கள் செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடனுக்குடன் அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். சாதகமாக பயன்படுத்தி எந்த ஒரு விஷயத்தையும் முன்னேற்றகரமாக எடுத்துச் செல்வீர்கள்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தனவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது. கூடுமானவரை இன்று நாவடக்கம் என்பது ரொம்ப முக்கியம். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாகவே இருக்கும். அதுபோலவே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து காரியத்தையும் மேற்கொள்ளுங்கள்.  காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |