குளிர்பானம் குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூர் பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான இந்துஜா என்பவர் ஆவரைகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளிர்பான கடைக்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளனர்.
அதன்பின் மீதமிருந்த ஒரு பாட்டிலை அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மறுநாள் காலையில் இந்துஜா அந்த குளிர்பானத்தை எடுத்து குடித்துள்ளார். ஆனால் இந்துஜா குடித்த சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்துஜாவின் பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தனர். ஆனால் அவரது உடல் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே போனதால் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மருத்துவர்கள் அவரது உடலில் விஷம் கலந்துள்ளது என தெரிவித்து வந்துளது. மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வந்த பின்னரே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவரும். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.