இருசக்கர வாகனம் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளை அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் சிவப்பிரகாசம் மற்றும் சண்முகசுந்தரம் என்பதும் ஏற்கனவே இவர்கள் தெற்கு காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.