Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அணிக்கு ஊக்கத்தொகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதையடுத்து மகளிர் அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிமுக அரசு அப்போது அறிவித்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விளையாட்டு துறை அமைச்சர் கூறியது, தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அணி வீராங்கணைகளுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். இந்நிலையில் இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக மகளிர் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.38 லட்சம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |