கடந்த ஆட்சியின் போது சென்னையில் வடிகால் அமைப்புகள் சீர்குலைக்க பட்டதே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் உறுதி தன்மை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சரியாக சீரமைக்க படவில்லை. இதனால்தான் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது எனக் கூறினார்.