தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநாடு சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சுனில் மைத்ரா அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாடு சேலம் மாவட்ட தலைவர் எம்.முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மாநில துணைத் தலைவர் எம்.சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் ஏ.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் எம்.முத்துக்குமரன், என்.திருநாவுக்கரசு, ஏ.அமராவதி மற்றும் எம்.மாதவவீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மாநில துணை தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியனார்.
அப்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் 40% பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் 6 லட்சம் காலிப் பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும். மேலும் சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் கோரிக்கைகளை அறிவிக்கவில்லை என்றால் மாநில செயற்குழுவைக் அழைத்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.