சுவிட்சர்லாந்தில் நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக திறக்கப்படும் சந்தைகளை அந்நாட்டு அரசாங்கம் சிவப்பு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என 3 மண்டலங்களாக பிரித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக திறக்கப்படும் சந்தைகளை அந்நாட்டு அரசாங்கம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் என 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்குள் நுழையும் பொது மக்களுக்கு சுவிஸ் அரசாங்கம் கொரோனா தொடர்பான சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது.
அதாவது சிவப்பு மண்டலத்திற்குள் போடப்படும் சந்தைக்குள் நுழையும் பொதுமக்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. ஆனால் ஆரஞ்ச் மண்டலத்திற்குள் நுழையும் பொதுமக்கள் கொரோனா தொடர்பான சான்றிதழை கொடுக்க அவசியமில்லை என்று ஸ்விஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.