Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த 10 நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், சில பள்ளிகள் நிவாரண முகாம்களாக உள்ளதாலும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |