உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பவாரியாவில் கிறிஸ்துமஸ் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பெல்ஜியத்தில் டிசம்பர் 12 வரை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.