அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கபட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படும் என்றும், செய்முறைத்தேர்வு, Viva Voce ஆகியவற்றையும் விரைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரிக்குப் பின் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.