Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்புணர்வு…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் வள்ளவிலை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (48) என்பவர் அதே பகுதியில் படிக்கும்  9 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், சிறுவன் மீது ஆசை ஏற்பட்டதால் அவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |