மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தில் பாபுராவ் மகன் வேமண்டு சீனு வசித்து வந்தார். இதனையடுத்து வேமண்டு சீனு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேமண்டு சீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தான் தங்கி வேலை பார்க்ககூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் வேமண்டு சீனு மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட வேமண்டு சீனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேமண்டு சீனுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேசை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.