Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கனமழை…. இன்று முதல் 25ஆம் தேதி வரை…. 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு, மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலையோரம் மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கும் அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |