கரூர் மாவட்டத்தில் வேன் மோதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கக்கல் பட்டியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகமாக வந்த வேன் ஓட்டுநர் ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதனால் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.