சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார் .
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார்.
இதில் 5 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும் .இப்போட்டியில் 3 சிக்சர்கள் அடித்து விளாசியதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்சர்கள் விளாசிய 2-வது வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரோகித் சர்மா. அதோடு இந்தப் பட்டியலில் 161 சிக்சர்கள் அடித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 124 சிக்சருடன் 3-வது இடத்திலும் உள்ளார்.