பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த பழங்களான திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், அத்தி உள்ளிட்டவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் வெளிநாட்டு மதுபானங்களைக் கலந்து பிரத்யேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
இந்தப் பணியை பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவருடன் பொதுமக்களும் சேர்ந்து உலர்ந்த பழங்களை வெளிநாட்டு மதுபானத்துடன் ஒன்றாகச் சேர்த்து கலந்தனர். இந்தக் கலவை சுமார் 30 நாட்கள் பதப்படுத்தப்பட்டு, அதன் பின்பு கேக் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 700 கிலோ கிராம் கேக் செய்வதற்கு இந்தக் கலவை உருவாக்கப்பட்டது. அதன்பின் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, மேஜிக் ஷோ போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.