Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களின் நலன் கருதி… ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்… நீதிமன்றம் அதிரடி…!!!

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களின் வீட்டின் அருகாமையிலேயே எளிதில் தடுப்பூசி கிடைக்கும் வகையில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பத்து தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் ஆசிரியர்கள், பள்ளியில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால் மாணவர்களின் நலன்கருதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்படி தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலனை கருதி வீட்டில் இருப்பது தான் சிறந்தது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |