Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்சர் அடித்ததால் ஆத்திரம் “…..! எதிரணி வீரரை காயப்படுத்திய பாக் வீரருக்கு அபராதம் …..!!!

வங்காளதேச அணி வீரர்  காலில் வேண்டுமென பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான்  அணி வீரரான ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.

இப்போட்டியின் போது வங்காளதேச அணி வீரர் அபிப் ஹூசைன் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது வேண்டுமென பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் அணியின்  வேகப்பந்து வீச்சாளரான ஷகீன் ஷா அப்ரிடிக்கு போட்டிக்கான கட்டணத்திலிருந்து 15 % அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் போது இதற்கு முந்தைய பந்தில் அபிப் ஹூசைன் சிக்சர் அடித்ததால் ஆத்திரமடைந்த அப்ரிடி தனது கோபத்தை வெளிப்படுத்தி நடவடிக்கையில் சிக்கியுள்ளார்.

Categories

Tech |