Categories
மாநில செய்திகள்

“குற்றவாளிக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும்”….. வைகோ வெளியிட்ட அறிக்கை….!!

திருச்சி மாவட்டத்தில் ஆடு திருடர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருடர்கள் அவரை வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இவர் இரவு ரோந்து பணியில் இருந்த போது ஆடு திருடர்களை 15 கி.மீ தொலைவுக்கு விரட்டி பிடிக்க சென்றார். இது அவரது துணிச்சல் மற்றும் கடமையை காட்டுகிறது. அதனை தொடர்ந்து அவரது உடல் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது.

மேலும் தமிழக அரசு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது ஆறுதல் அளிக்கின்றது. குற்றவாளி 4 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். எனவே இந்த விசாரணை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Categories

Tech |