Categories
உலக செய்திகள்

“முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி!”.. ஆஸ்திரேலிய அரசு வெளியிட்ட தகவல்..!!

ஆஸ்திரேலிய அரசு, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள், அடுத்த மாதத்திலிருந்து தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று தெரிவித்திருக்கிறது.

உலக நாடுகளில், கொரோனா பரவியதால் பல்வேறு நாடுகள், போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோன்று, ஆஸ்திரேலியாவிலும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில், அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வர அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |