பி.சுசீலாவை பிரபல நடிகரான விக்ரம் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பி.சுசீலா இந்திய திரையுலகில் பிரபல பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இவரது குரலில் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இவரை தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.