பார்த்திபன் தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் தயாரித்து நடித்த படம் ”ஒத்த செருப்பு”. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றது. இதனையடுத்து, இவர் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
மேலும், ”இரவின் நிழல்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதில்,”என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால் அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை.அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்”. என பதிவிட்டுள்ளார்.
Hhaappppyy Sunday
என் FB hack செய்யப்பட்டிருக்கிறது.
அறிவுள்ளவன் படமெடுக்கலாம்,அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம்,ஆனால்
அறிவுக்கே பிறந்த சில sweet enemies
Hack செய்கிறார்கள்.
அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை.அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள். pic.twitter.com/DkUfgjt3xy— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 21, 2021