லாரி திருடிய வாலிபர் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நாகிசெட்டிபட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது லாரியை வருதம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த லாரி திடீரென காணாமல் போய்விட்டது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் காசாளர் மதன்குமார், கார்த்திக்கிடம் இதுகுறித்து செல்போனில் தகவல் தெரிவித்தார்.
அதன்பின் கார்த்திக் லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்.கருவி மூலம் அது இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். அதன்படி லாரி காரிப்பட்டி டோல்கேட் அருகில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகமது கரீமுல்லா என்பவர் லாரியை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முகமது கரீமுல்லாவை காவல்துறையினர் கைது செய்து லாரியை மீட்டனர்.