சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று காவல்துறை தடை விதித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வுகள் தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் பரவியது. அதனால் கடற்கரை முழுவதும் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.