Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் டிசம்பர் 3-ம் தேதி வரை போராட்டம்…. பாஜக அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள, தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி லிட்டருக்கு 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் எந்தெந்த அணியின் சார்பில் எந்த வகை போராட்டங்கள் நடத்தப்படும் என்று போராட்டத்தின் பொறுப்பாளர்கள் அடங்கிய பட்டியலில் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |