Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 சையத் முஷ்டாக் அலி : மாஸ் காட்டிய ஷாருக் கான் ….! தமிழக அணி கோப்பையை வென்று அசத்தல் ….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக அணி கோப்பையை வென்றது .

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தொடக்கத்திலேயே தடுமாறியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக  அபிநவ் மனோகர் 46 ரன்கள் குவித்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் – ஜெகதீசன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் ஹரி நிஷாந்த் 23 ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜெகதீசன் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விஜய் சங்கர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இதில் ஜெகதீசன் 41 ரன்னில் வெளியேற விஜய் சங்கர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதனால் கடைசி 2 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்டது. இதன்பிறகு இறுதியில் களமிறங்கிய ஷாருக்கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் .இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி த்ரில் வெற்றி பெற்றது.இதில் ஷாருக்கான் 33 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3-வது முறையாக தமிழக அணி சையத்  முஷ்டாக் அலி கோப்பையை வென்றுள்ளது. அதோடு சையது முஷ்டாக் அலி தொடரில் அதிகமுறை  கோப்பையை வென்ற அணியாகவும் தமிழக அணி புகழ் பெற்றுள்ளது.

Categories

Tech |