உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை என சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்”. என பதிவிட்டுள்ளார்.
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ
— sureshkamatchi (@sureshkamatchi) November 22, 2021