Categories
மாநில செய்திகள்

86 ரயில்களில் கட்டணம் குறைப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. பொது மக்கள் கூட்டத்தையும் தவிர்ப்பதற்காக முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட்டு முக்கிய வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் ரயில் கட்டணம் 90 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. தற்போது வழக்கமான அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் 86 ரயில்களின் கட்டணம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |