Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சமுத்திரக்கனியின் ‘சித்திரைச் செவ்வானம்’… அசத்தலான மோஷன் போஸ்டர் இதோ..‌.!!!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரச் செவ்வானம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் சர்காரு வாரி பாட்டா, ஆர்.ஆர்.ஆர், பீம்லா நாயக் போன்ற தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரைச் செவ்வானம் படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

ஸ்டன்ட் இயக்குனர் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் ரீமா கல்லிங்கல், சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் விஜய் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சித்திரைச் செவ்வானம் படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

 

Categories

Tech |