பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் ஒரு துண்டு ரொட்டிக்கான விலை 20% உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டனில் கடந்த 9 வருடங்களில் இல்லாத அளவில், கோதுமையின் விலை தற்போது வெகுவாக அதிகரித்தது. இதனையடுத்து ரொட்டியின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த வருடத்தில் கோதுமையின் விலை 26.7% அதிகரித்தது. மேலும் ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் அவன்களுக்கான, எரிவாயு விலையும் அதிகரித்தது. உலகம் முழுக்க உணவுப் பொருட்களுக்கான விலை 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் சமீப நாட்களில் பாஸ்தா விலையும் வெகுவாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லாரி ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதுவும், விலைவாசி அதிகரிப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.